பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த சமூகக் கலைஞருக்கான இசை விருது

Share This News

எங்கள் நிகழ்ச்சிகள் மூலமாக வில்லுப்பாட்டு என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன? நமது பாரம்பரியக் கலையின் பெருமை என்ன? என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். என்னைப் பொறுத்தவரை வில்லுப்பாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குக் கலை மட்டுமல்ல. அது நமது முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற மிகப்பெரிய பொக்கிஷம். நமது பண்பாடு, பாரம்பரியம், வரலாறு, இசை, இலக்கியம் எனப் பல சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான கலை.

எனது வில்லுப்பாட்டுக் கலைப் பயணம்

சிறுவயது முதலே எனக்குக் கும்மிப்பாட்டு, வில்லுப்பாட்டு போன்ற நாட்டுப்புறக் கலைகளின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அந்தச் சமயத்தில் பள்ளிப் படிப்புதான் மிகவும் முக்கியம் என்பதால், முதலில் படிப்பில் கவனம் செலுத்துமாறு என் அம்மா அறிவுறுத்தினார்.

அதன்பிறகு கல்லூரியில் படிக்கச் சென்றபோது, "வில்லுப்பாட்டு கற்றுக்கொள்கிறாயா?" என்று என் அம்மா கேட்டார். நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, கல்லூரிப் படிப்புடன் சேர்த்து வில்லுப்பாட்டையும் கற்கத் தொடங்கினேன்.

வில்லுப்பாட்டு கற்கத் தொடங்கிய சில நாட்களிலேயே எனக்கு அரங்கேற்றம் நடைபெற்றது. எனது அரங்கேற்றம் முடிந்த உடனேயே பல்வேறு கோவில்களில் இருந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளும் முன்பணங்களும் வரத் தொடங்கின.

அந்த நேரத்தில் எனது குருநாதர் என்னிடம் கூறிய ஒரு வார்த்தை என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

"இறங்கக்கூடாது; இறங்கிவிட்டால் வெற்றி பெற வேண்டும்!"

இந்த வார்த்தையை இன்றுவரை ஒரு மந்திரமாக மனதில் வைத்துக்கொண்டு பயணித்து வருகிறேன். வில்லுப்பாட்டுக் கலையை என்னால் எந்த அளவிற்கு உயர்த்த முடியுமோ, அந்த அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதே எனது இலட்சியம்.

வில்லுப்பாட்டில் பல்வேறு வகையான பழமையான வர்ணமெட்டுகள் உள்ளன. அவற்றை இன்றைய தலைமுறையினரிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகம். அதற்காக என்னால் முடிந்த அளவிற்கு பல்வேறு வர்ணமெட்டுகளைக் கற்றுக்கொண்டு, அவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறேன்.

இந்தக் கலைப் பயணத்தில் பல்வேறு கஷ்டங்களையும், சவால்களையும், அதேபோல் பல மகிழ்ச்சியான தருணங்களையும் கடந்து வந்திருக்கிறேன். என்னுடன் இணைந்து செயல்படும் ஐந்து கலைஞர்களுடன் பல்வேறு மேடைகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

எங்கள் நிகழ்ச்சிகள் மூலமாக வில்லுப்பாட்டு என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன? நமது பாரம்பரியக் கலையின் பெருமை என்ன? என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

என்னைப் பொறுத்தவரை வில்லுப்பாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குக் கலை மட்டுமல்ல. அது நமது முன்னோர்கள் நமக்குக் கொடுத்துச் சென்ற மிகப்பெரிய பொக்கிஷம். நமது பண்பாடு, பாரம்பரியம், வரலாறு, இசை, இலக்கியம் எனப் பல சிறப்புகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான கலை.

குறிப்பாக, பழைய காலத்தில் இருந்த வர்ணமெட்டுகளை இன்றைய தலைமுறையினரிடம் மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை. ஏனென்றால், இன்றைய தலைமுறையில் பலருக்கு வர்ணமெட்டுகள் என்றால் என்ன, வில்லுப்பாட்டு என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது.

இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், கல்லூரியில் பயிலும் 10 மாணவிகளுக்கு வில்லுப்பாட்டுக் கலையின் சிறப்புகளையும், அதன் அடிப்படைகளையும் கற்றுக்கொடுத்துள்ளேன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குருநாதரின் வழிகாட்டுதல், அம்மாவின் ஊக்கம், மக்களின் ஆதரவு, என்னுடன் பயணிக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பு என அனைத்தும் எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன.

எனது இறுதி இலட்சியம் ஒன்றுதான்: வில்லுப்பாட்டுக் கலையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து, அதன் பெருமையையும் பழமையான வர்ணமெட்டுகளையும் அழியாமல் பாதுகாத்து, இந்தக் கலையை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்!