பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த சமூக தொண்டுக்கான விருது

Share This News

இவரது இந்த பிரத்யோக விழிப்புணர்வு பணிகளை சிறப்பாக செய்வதற்கு, மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வரும் நகராட்சி நிர்வாக துறை சார்ந்த ஆணையர்கள், மண்டல இயக்குநர்கள், கூடுதல் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவிக்கிறார்..

தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டம், ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், மஞ்சப்பையை கையில் எடுப்போம், கொரோனா நோய் உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு, தேர்தலில் 100 சதவிகித வாக்களித்தல், போதைப்பொருள் ஒழிப்பு, பிறப்பு இறப்பு, சாலை பாதுகாப்பு, பள்ளிகளில் காலை சிற்றுண்டி உள்ளிட்ட தமிழக அரசின் நகராட்சி துறை சார்ந்த திட்டங்களை பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் அப்துல் ஜாஃபர், சுகாதார அலுவலர்.

இவர் தற்போது உதகமண்டலம் நகராட்சியில் சுகாதார அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை அப்துல் ஜாஃபர் 170 விழிப்புணர்வு பாடல்களை தானே எழுதி பாடியுள்ளார். ஒரு விழிப்புணர்வு குறும்படமும் எழுதி, நடித்து, தயாரித்து உள்ளார். இவரது விழிப்புணர்வு பணிக்காக இதுவரை 84 விருதுகளும், 7 மாவட்ட ஆட்சியர்களின் விருதும், ஒரு உலக சாதனையாளர் பட்டமும், ஒரு கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.