பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த சமூக சேவகி விருது

Share This News

பேராசிரியர்களுக்கும் உதவிகள் பல செய்திருக்கிறேன். நான் கல்லூரியில் வேலை செய்யும் காலகட்டத்தில் பெண் குழந்தைகளிடம் உடல் உபாதைகள் அதிகம் இருப்பதை கவனித்தேன் .முதியோர்கள், நடுத்தர வயதினர்கள் மற்றும் சிறு வயது குழந்தைகள் முதல் அனைவரும் மாதம் மாதம் ஐந்து நாள் மிக மோசமான வலியை எதிர்கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து நிறைய கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருப்பதை கவனித்தேன்.

வணக்கம்????.என் பெயர் விஜி நான் மதுரை மாவட்டத்தில் பரவையில் வசித்து வருகிறேன் நான் சிறுவயது முதலில் அனைவருக்கும் உதவி செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவள்.  என் அம்மா அறிவொளி இயக்கத்தில்  படிப்பு சம்பந்தப்பட்ட தொண்டுகள் ஆற்றிக் கொண்டிருக்கும்போது பத்து வயதிலேயே நான்  எழுத படிக்கத் தெரியாத மக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களுடைய பெயரை எழுத கற்றுக் கொடுத்துள்ளேன். நான் 12ம் வகுப்பு முடித்தவுடன்  திருமணம் நடந்தது.18 வயதில் திருமணம் நடந்து 19 வயதில் என் முதல் குழந்தை .அந்த சூழ்நிலையில்   தட்டச்சு தமிழ் 

,ஆங்கிலம் இரண்டையும் முடித்தேன்.  அடுத்து எனது கிராமத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்று வேலை செய்ய முடியாத பெண்களுக்கு வீட்டிலிருந்து  வருமானத்தை ஈட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை வளர்ந்தது. அதன் பிறகு 24 வயதில் எனது இரண்டாவது குழந்தை .பள்ளி படிப்பை முடித்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் எனது அடுத்த படிப்பு பயணத்தை தொடங்கினேன் .BCA.,MCA.,MPhil.,முடித்து அதற்கு மேல் என்னால் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை.

அதன் பிறகு நான் ஒரு தனியார் கல்லூரியில்  பேராசிரியராக வேலை செய்தேன். அதில் என்னால் முடிந்த அளவு எனது மாணவிகளுக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்து இருக்கிறேன். அது மட்டுமல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆலோசனைகள் மற்றும் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆலோசனைகளை சொல்லும் நல்ல ஆலோசகராகவும் இருந்து வந்திருக்கிறேன் .  உடன் வேலை செய்யும்  பேராசிரியர்களுக்கும் உதவிகள் பல செய்திருக்கிறேன். நான் கல்லூரியில் வேலை செய்யும் காலகட்டத்தில் பெண் குழந்தைகளிடம் உடல் உபாதைகள் அதிகம் இருப்பதை கவனித்தேன் .முதியோர்கள், நடுத்தர வயதினர்கள் மற்றும் சிறு வயது குழந்தைகள் முதல் அனைவரும் மாதம் மாதம் ஐந்து நாள் மிக மோசமான வலியை எதிர்கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து நிறைய கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருப்பதை கவனித்தேன்.

அப்போது எனக்கு கிடைத்தது தான் Femi9.  மக்களுக்கு  இந்தப் பிரச்சினைகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் நடந்து கொண்டிருக்கும் என்பதையும் உணர்ந்தேன். நான் இதைப் பற்றி தெரிந்து கொள்ள AS அறக்கட்டளை உடன் இணைந்தேன்.ஒவ்வொரு கிராமமாக சென்று பெண்களை திரட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன்.நாப்கின் மூலமாக மண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி பெண்ணையும் மண்ணையும் காப்போம் என்ற கோட்பாடுகளை முன்னிறுத்தி அனைவருக்கும் விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன். நான் கொடுக்கும் விழிப்புணர்வுகளில் பிளாஸ்டிக் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் மாதவிடாய் காலத்தில்ஏற்படும் பிரச்சனைகள் , கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள்,   எதிர்கால தூண்களாக இருக்கக்கூடிய நமது குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன்.

இதன் மூலமாக இன்று கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்திருக்கிறார்கள்.  எனக்கு நான் இந்த மண்ணில் பிறந்ததற்கான பணியை திறம்பட செய்து கொண்டிருக்கிறேன் என்ற மனதிருப்தி உள்ளது.  என்னை தேர்ந்தெடுத்து சிறந்த சமூக சேவகி விருது வழங்கியதற்காக சன் விருதுகள் குழுமத்திற்கு நன்றிகள் பல. சன் விருதுகள் வழங்கும் சிறந்த சமூக சேவகி விருதின் காரணமாக நான் ஏதோ இந்த சமூகத்திற்கு ஒரு சரியான பணியை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறேன். "பெண்ணையும் மண்ணையும் காப்போம்".    ????நன்றி????.