பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த சமூக சேவகி விருது

Share This News

M.Sc (தகவல் தொழில்நுட்பம்), M.Sc (கணிதம்), M.Ed சிறப்புக் கல்வி (பார்வைக் குறைபாடு), M.Sc (உளவியல்) ஆகிய கல்வி தகுதிகளை உடைய டாக்டர். மோ. அனுசுயா, தற்போது சங்கல்ப் சிறப்புப் பள்ளி, சென்னை மற்றும் NIEPVD-பிராந்திய மையத்தில் விருந்தினர்

M.Sc (தகவல் தொழில்நுட்பம்), M.Sc (கணிதம்), M.Ed சிறப்புக் கல்வி (பார்வைக் குறைபாடு), M.Sc (உளவியல்) ஆகிய கல்வி தகுதிகளை உடைய டாக்டர். மோ. அனுசுயா, தற்போது சங்கல்ப் சிறப்புப் பள்ளி, சென்னை மற்றும் NIEPVD-பிராந்திய மையத்தில் விருந்தினர்.

பேராசிரியராகப் பணிபுரிகிறார். தவிர, பல விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். சமீபத்தில் கெளரவ டாக்டர் பட்டம், ஹெலன் கெல்லர் விருது பெற்று, Mental Mathematics using Maths Tricks Education Book, Braille Book_Mental Mathematics using Maths Tricks (Education Book), மனக்கணக்கின் வழியே கணிதத்தைக் கற்பிப்போம், அற்புதம் தமிழ்க் கவிதைகள் போன்ற புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார் (2024).

மற்றும் சில சாதனைச் செயல்பாடு உட்பட பல விருதுகளைப் பெற்றவர், மாற்றுத்திறனாளிகளுக்கான Boccia விளையாட்டுப் போட்டியில் தேசிய அளவில் கலந்துகொண்டு பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண் என்பதைப் புறம் தள்ளி, எதிர்மறையான எண்ணங்களை வென்றெடுத்து, வாழ்க்கையின் வகுக்கும் இலக்குகளில் கவனம் செலுத்தி, நேர்மறையான நோக்கங்களோடு செயல்படுபவர்.

ஆக்கப்பூர்வமான செய்திகளைச் சமூகத்திற்கு வழங்கியுள்ளார். "உதவி செய்யும் கரங்கள் ஒருபோதும் தோற்காது. என்ற எண்ணத்தைக் கொண்டு செயல்படுபவர். வாழ்க்கையின் அனைத்துப் போராட்டங்களையும் புன்னகையோடு சமாளிக்கும் மனம் படைத்தவர். நேர்மறை அதிர்வுக்கான தளங்களையும் தொழில் நுட்ப உதவியோடு அமைத்துள்ளார்.