பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த ஆசிரியருக்கான விருது

Share This News

என்னுடைய பெயர் ஜெய்லானி. நான் அங்கன்வாடி ஆசிரியை யாக 8 வருடங்களாக பணிபுரிகிறேன். 10 குழந்தைகள் மட்டும் வருகை புரிந்த அங்கன்வாடியில் இப்போது 40 குழந்தைகள் வருகையை உயர்த்தி உள்ளேன். புத்தக கண்காட்சிகள் மற்றும் வேறு பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் குழந்தைகளை கலந்து கொள்ள வைத்தல், செடி நட வைத்தல், அதனை அவர்களே வளர்க்க வைத்தல், நல்லொழக்கங்கள், நற்பண்புகளை வளர்த்தல், குழந்தைகளுக்கு புரியும் விதமாக பல்வேறு விதமாக பாடங்களை புரிய வைத்தல்,ஒரு ஆங்கில வழி இணையாக அங்கன்வாடியை மாற்றி உள்ளேன்.

ஆங்கில பள்ளியில் உள்ளது போல் என்னுடைய தனிப்பட்ட முயற்சியில் குழந்தைகளுக்கு பார்க், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தோட்டம், போன்ற அனைத்து வசதிகளும் ஆங்கில வழி பள்ளிக்கு நிகராக அமைத்துள்ளேன். எனது சொந்த செலவும் இதில் அடங்கும். தேசிய விருது, தமிழ்நாடு அளவில் விருது, மாவட்ட அளவில் விருது, இது போக தனியார் மூலம் விருது மற்றும் சான்றிதழ்கள், கலெக்டர் பாராட்டு,எம்எல்ஏ, எம்பி பாராட்டுகள் பெற்றுள்ளேன்.

இது அனைத்தும் என் பொது நலமே. அங்கன்வாடி குழந்தைகள் அனைத்தும் என் குழந்தைகளே. என் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக யாரிடம் உதவி கேக்க தயங்கமாட்டேன். இந்த பாராட்டுகள் அனைத்தும் எனது அங்கன்வாடி குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்கள், மற்றும் எனது உதவியாளர் மற்றும் அலுவலர்களுக்கே சேரும். இந்த சன் விருது-தில் கலந்து கொள்வதில் பெறு மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய சேவையை பாராட்டி சன் விருது அடையாளம் கண்டத்திற்கு மிக்க நன்றி.