பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த சமூக சேவகர் விருது

Share This News

இந்த கல்வி ஆண்டில் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தேர்ச்சி விழுகாட்டை கொடுத்தோடு மட்டுமில்லாமல் தமிழ் பாடத்திலும் 90% தேர்ச்சியை கொடுத்திருக்கிறேன். இதற்காக நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன் .அந்த உழைப்பின் பலனை காணுகின்ற போது அதிலே ஒரு மகிழ்வு ஏற்படும் அந்த மகிழ்வில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.

வணக்கம் .நான் டேவிட். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கசம் தெவலாய்சு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 16 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறேன் .நான் சமூக அறிவியல் மற்றும் தமிழ் பாட ஆசிரியராக பணியாற்றுகிறேன். சமூக நலனில் சிறு வயது முதற்கொண்டு எனக்கு அக்கறை உண்டு.

அதன் காரணமாக பல்வேறு விதமாக இச்சமுதாயத்திற்கு உதவி வருகிறேன் அன்று முதல் இன்று வரை பலதரப்ப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிற வகையிலே சமுதாயத் தொண்டாற்றி இருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் என்னுடைய இளம் வயது தொடங்கி அதாவது 18 வயது முதல் தற்போது வரை 52 முறை ரத்ததானம் செய்து இருக்கிறேன். மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானத்திற்கு உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளேன் மட்டுமல்லாது எனது பள்ளியில் மாணவர்களுக்கு பல வகைகளில் அவர்களது கல்வி சார்ந்த தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு கேட்காமலே பல உதவிகளை இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன். இப்படி எல்லாம் நான் செய்வதற்கு எனக்கு எனது சிறுவயதில் பாடத்தை போதித்த ஆசிரியர்கள்  பலர் முன்மாதிரியாக இருந்ததே இதற்குக் காரணம் என்பதில் ஐயமில்லை.

அதேபோல் என்னையும் முன்மாதிரியாக வருங்காலத்தில் எனது மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் எனது மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன் ஏன் என்று சொன்னால் நாளைய சமுதாயம் அவர்களுடைய கையில்   .... கடந்த ஆண்டில் எனது தமிழ் பாடத்தில் 96% பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முயற்சி சதவிகிதம் கண்டுள்ளேன்.

இந்த கல்வி ஆண்டில் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் தேர்ச்சி விழுகாட்டை கொடுத்தோடு மட்டுமில்லாமல் தமிழ் பாடத்திலும் 90% தேர்ச்சியை கொடுத்திருக்கிறேன். இதற்காக நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன் .அந்த உழைப்பின் பலனை காணுகின்ற போது அதிலே ஒரு மகிழ்வு ஏற்படும் அந்த மகிழ்வில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.

மட்டுமல்ல எங்களது பள்ளியில் பயின்று வரும் மாணவக் கண்மணிகள் அத்தனை பேரும் வறுமை நிறைந்த சூழ்நிலையில் இருந்து எங்கள் பள்ளிக்கு வருகை புரிகிறவர்கள். இப்படிப்பட்ட மாணவர்களை எப்படியாகிலும் அவர்களுடைய வாழ்வில் முன்னேற்றம் அடையச் செய்திட வேண்டும் என்கிற நோக்கத்திலே மிகவும் உறுதியோடு செயலாற்றி வருகிறேன். இதிலே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்று சொன்னால் இந்த சன் விருதுகள் எப்படி என்னையும் என் சேவையையும் அடையாளம் கண்டது என்பதுதான்... மிகவும் மகிழ்கிறேன் நன்றி கூறுகிறேன்