பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

வாழ்நாள் சாதனையாளர் விருது

Share This News

2021 இல் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய திருவிழாவில் “ குளோபல் லிட்டரரி விருது “ பெற்றுள்ளார். ஹார்வர்ட் உலக சாதனை கலாம் உலகசாதனை உட்பட 12 ற்கும் மேற்பட்ட உலக சாதனைகளை ப் பெற்றுள்ளார் . 2023 ம் ஆண்டு தேசிய கவிதைப்போட்டியில் போட்டியில் வெற்றி பெற்று சிறந்த கவிஞர் விருதினைப் பெற்றுள்ளார். 2022 ல் அமெரிக்காவின் டைம்ஸ் ஆஃப் உமன் பத்திரிக்கை இவரது சாதனைகளை வெளியிட்டது. இதுபோன்ற 6 பத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது இவரது சாதனைகள்.

முனைவர் .நா.பாரதி 

1/137, அம்பேத்கர் தெரு 

 சு.குளத்தூர்  அஞ்சல் 

 சங்கராபுரம் தாலுக்கா 

 கள்ளக்குறிச்சி  மாவட்டம் 


முனைவர் . நா.பாரதி (37) கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில்  உள்ள  சு. குளத்தூர் கிராமத்தில் பிறந்தவர்  . இவர்  இந்திய  குடிமைப்பணி  தேர்வுகளுக்கு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுத்தாளர், உலக சாதனையாளர், புத்தகதொகுப்பாளர் பட்டிமன்றப்பேச்சாளர், இணையவழி தமிழ் நிகழ்வுகளின் நடுவர் ஒருங்கிணைப்பாளர் இவர் கவிதை மீது கொண்ட  ஆர்வமிகுதியால் தனது ஐந்தாம் வகுப்பிலிருந்தே  கவிதை எழுதத்தொடங்கியவர்  குடும்பமலர், சிறுவர் மலரில், கவிதை  மற்றும்  சிறுகதை எழுதி பரிசுத்தொகையும் பெற்றுள்ளார். தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பாக 2004 ல் தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரிய முயற்சியில் தனது பங்களிப்பாக   பொது மக்களிடமிருந்து 1200 கையொப்பங்களை பெற்றுத்தந்துள்ளார்.

இவர் ஆங்கிலத்திலும் தனது  படைப்புகளை வெளியிட்டு ஆங்கில இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றியதற்காக சர்வதேச  அளவிலும், தேசிய அளவிலும்  200ற்கும் மேற்பட்ட விருதுகளை  பெற்றுள்ளார்.

2021 – ம்  ஆண்டு ஜூலை 10 – ம் தேதி முதல் நவம்பர் 10- ம் தேதிக்குள்  76 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் 228 பக்கங்கள் கொண்ட  பாரதி நாகாவின் “காதல் சுவடுகள் “ என்ற தமிழ்ப்புத்தகமும் அடங்கும்

உலக மகளிர் அமைப்பு   ( World  Women Council  ) மற்றும்  டைம்ஸ்  ஆஃப்  உமன்  பத்திரிக்கை(  Times  of women ) இணைந்து 2022 ஆம் ஆண்டின் உலகின் தலைச்சிறந்த 100 சாதனைப்பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு  ( Intetnational  Women Icon – Wonder  Women  - 2022 ) விருதினைப்  பெற்றார்.

2021 இல்  புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய திருவிழாவில் “   குளோபல் லிட்டரரி  விருது “ பெற்றுள்ளார். 

ஹார்வர்ட் உலக சாதனை கலாம்  உலகசாதனை உட்பட 12 ற்கும் மேற்பட்ட உலக சாதனைகளை ப் பெற்றுள்ளார் . 

2023 ம் ஆண்டு தேசிய கவிதைப்போட்டியில் போட்டியில் வெற்றி பெற்று சிறந்த  கவிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.

2022  ல் அமெரிக்காவின் டைம்ஸ் ஆஃப் உமன் பத்திரிக்கை இவரது சாதனைகளை  வெளியிட்டது. இதுபோன்ற 6 பத்திரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது இவரது சாதனைகள்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி 2023 ல் புதுச்சேரியில் நடைபெற்ற  திருக்குறள் மாநாட்டில் பங்கேற்று சாதனைப் பெண்மணி விருதினையும் , திருவள்ளுவர் விருதினையும் பெற்றுள்ளார்.

2025 ல் தொல்காப்பிய  மாநாட்டில் பங்கேற்று “ தொல்காப்பியச் சுடராழி “ விருதினைப்பெற்றுள்ளார்.

2022 ம் ஆண்டு  மதுரை தமிழ்ச்சங்கத்தில் சாலமன் பாப்பையா அவர்களிடம் அறம் விருதினை பெற்றுள்ளார்.

2022 ம் ஆண்டு  இரும்புபெண்மணி  விருதினைப் பெற்றுள்ளார்.

2022 ம் ஆண்டு சிங்கப்பெண் விருதினைப் பெற்றுள்ளார் .

2023ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது

அன்புத்தமிழச்சி விருது ( மக்கள் உரிமைக் கழகம்  ) – 2025

2025 ம் ஆண்டு தமிழ்நாவலர் விருது 

இவரது தமிழ்ப்பணிக்காக 300ற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.