பயனுள்ள விடயங்களை மறைமுகமாக அளித்து வருகிறேன். மேலும் செய்தி வாசிப்பதிலும் பயிற்சி எடுத்து செய்தி வாசிப்பு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்னுடன் சேர்ந்து எனது கணவரும் சேர்ந்து எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். முதலாவது அவருக்கு நன்றியை தெரிவித்துக். கொள்கிறேன். எனது கணவரும் சமுதாய சேவைகளில் ஒன்றான இரத்த தானம் செய்து வருகிறார். மேலும்
வணக்கம் .நான் லட்சுமிப்பிரியா. M.
எனது கணவர் பெயர் v. சுரேஷ்.சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிகிராஸ் மேட்டூர் பகுதியில் வாழ்ந்து வருகிறேன்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு அதை தொடர்ந்து
எழுத்து பணியிலும் தொடர்கிறேன். மேலும் என் சொந்த பிறந்த இடம் தேனி மாவட்டம். நான் கடந்த 2022 இல் கவிதைகள் வடிவில் " மனம் திறந்து பேசலாம்" என்னும் பெயரில் ஒரு புத்தகத்தை சொந்தமாக எழுதி தென்சென்னை தமிழ் சங்கத்தின் வாயிலாக அறிமுகம் செய்தேன். அதன் பிறகு திரைப்பட பாடல்களும் எழுதி முன்னிலைப்படுத்தி வருகிறேன். " தீரா காதல் " என்னும் பாடல் இயற்றி இயக்கி நிதி பிரச்சினையால் அப்படியே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இருந்தாலும் பாடல்கள் எழுதி வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என் எழுத்துகள் மூலம் இச்சமுதாயத்திற்கு
பயனுள்ள விடயங்களை மறைமுகமாக அளித்து வருகிறேன். மேலும் செய்தி வாசிப்பதிலும் பயிற்சி எடுத்து செய்தி வாசிப்பு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்னுடன் சேர்ந்து எனது கணவரும் சேர்ந்து எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். முதலாவது அவருக்கு நன்றியை தெரிவித்துக். கொள்கிறேன். எனது கணவரும் சமுதாய சேவைகளில் ஒன்றான இரத்த தானம் செய்து வருகிறார். மேலும்
விபத்து நேரங்களில்
தனது சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மூலம் இலவசமாக மக்களுக்கு அவரால் முடிந்த நேரங்களில் உதவி செய்து சமூக பணியாற்றி வருகிறார். அதன் கூடவே விவசாயத்தையும் முன்னிலை படுத்தி செய்து வருகிறார்.
வருங்காலத்தில் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக
நல்லதொரு குடும்பம் மற்றும் நல்லதொரு சமுதாயத்திற்கு எங்களால் முடிந்த பணி ஆற்ற விரும்புகிறோம். இந்த சன் விருது வழங்கும் விழா மூலம் எங்களை அடையாளப்படுத்தி முதன்மை படுத்துவதற்கு முதலாவது நன்றிகள்.
மிக்க மகிழ்ச்சியும் கூட நாங்கள் சன் விருதுகளுக்கு மிக மன நிறைவுடன் நன்றி தெரிவிக்கிறோம்.

Share This News