பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த கல்வியாளர் விருது

Share This News

நானும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தவள்தான் .நான் அரசு பள்ளியில் பணி ஏற்பதற்கு முன்பும் அரசு பள்ளியில் பணி ஏற்ற பின்பும் பல்வேறு ஏழை எளிய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களைகல்விச்செயல்பாடுகள்,கல்வி இணைச்செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தன்னிகரில்லா தலைவர்களாக மிளிரச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அனைவருக்கும் வணக்கம். நான் முனைவர் உ.மா. சாந்தி .நான் திருவாரூர் மாவட்டத்திலுள்ள இராஜமன்னார்குடியில் வசித்து வருகின்றேன் .நான் 10 ஆண்டுகாலம் இடைநிலை ஆசிரியராகவும், 11 ஆண்டுகாலம் தலைமையாசிரியராகவும் பணியாற்றி தற்பொழுது ஒன்பது ஆண்டு காலமாக வரலாறு பட்டதாரி ஆசிரியராக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நொச்சியூரில் பணிபுரிந்து வருகின்றேன்.

நானும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தவள்தான் .நான் அரசு பள்ளியில் பணி ஏற்பதற்கு முன்பும் அரசு பள்ளியில் பணி ஏற்ற பின்பும் பல்வேறு ஏழை எளிய மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களைகல்விச்செயல்பாடுகள்,கல்வி இணைச்செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தன்னிகரில்லா தலைவர்களாக மிளிரச் செய்து கொண்டிருக்கின்றேன்.

பெங்களூரி லுள்ள ISRO-URSC பயிற்சி பட்டறைக்கு நேரடியாக சென்று வரும் வாய்ப்பு கிடைத்ததுஅது மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை வளர்ப்பதற்கு ஒரு தூண்டுகோலாக விளங்கியது என்றால் மிகையாகாதுஎன்னுடைய கல்விப் பணிக்காக ஆசிரியத் திலகம், ஆசிரியர் செம்மல், ஞானகுரு, நல்லாசிரியர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளேன்பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் வழி செம்மொழியான நம் தாய் மொழியாகிய கன்னித் தமிழைவளர்க்க தமிழ்த் தொண்டு செய்து மூன்று உலக சாதனை விருதுகளையும்,பல இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளேன்பன்னாட்டு அரிமா சங்கத்திலும் உறுப்பினராக இருந்து கொண்டு பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகின்றேன்.

அதற்காக 'சிறந்த சமூகவியலாளர்' போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளேன்"வயிற்றுக்குச் சோறிட வேண்டும்- இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிட பல கல்வி தந்து -இந்த பாரை உயர்த்திட வேண்டும்" என்ற பாரதியின் வரிகளுக்கேற்பவும் , "கனவு காணுங்கள் அது இலட்சிய கனவாக இருக்கட்டும்" என்ற கலாம் அவர்களின் வரிகளுக்கேற்பவும் இன்றுவரைவாழ்ந்து கொண்டிருக்கும் என்னை அடையாளம் கண்டு சன் விருதினை வழங்கி கௌரவிக்கும் சன் விருது குழுமத்தார்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்