பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.

Get In Touch

சிறந்த சமூக சேவகர் விருது

Share This News

எனது கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு பல வகைகளில் அவர்களது கல்வி சார்ந்த தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு கேட்காமலே பல உதவிகளை இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன்.

வணக்கம் .நான் கோ.கிருஷ்ணகுமார்,பி.இ.,. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் கிராமத்தில் வசித்து வருகிறேன் மேலும் 16 ஆண்டுகளாக சமூகசேவை புரிந்து வருகிறேன் .நான் கணினி அறிவியல் துறையில்  பணியாற்றுகிறேன். சமூக நலனில் சிறு வயது முதற்கொண்டு எனக்கு அக்கறை உண்டு. அதன் காரணமாக பல்வேறு விதமாக இச்சமுதாயத்திற்கு உதவி வருகிறேன் அன்று முதல் இன்று வரை பலதரப்ப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிற வகையிலே சமுதாயத் தொண்டாற்றி இருக்கிறேன்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் என்னுடைய இளம் வயது தொடங்கி அதாவது 18 வயது முதல் தற்போது வரை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்து இருக்கிறேன்.அது மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானத்திற்கு உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளேன், அது மட்டுமல்லாது எனது கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு பல வகைகளில் அவர்களது கல்வி சார்ந்த தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு கேட்காமலே பல உதவிகளை இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன்.

இப்படி எல்லாம் நான் செய்வதற்கு எனக்கு எனது சிறுவயதில் பாடத்தை போதித்த ஆசிரியர்கள்  பலர் முன்மாதிரியாக இருந்ததே இதற்குக் காரணம் என்பதில் ஐயமில்லை. அதேபோல் என்னையும் முன்மாதிரியாக வருங்காலத்தில் எனது கிராமத்தினர் பின்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் எனது கிராம இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன் ஏன் என்று சொன்னால் நாளைய சமுதாயம் அவர்களுடைய கையில். இதற்காக நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன் .

அந்த உழைப்பின் பலனை காணுகின்ற போது அதிலே ஒரு மகிழ்வு ஏற்படும் அந்த மகிழ்வில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.   இதிலே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்று சொன்னால் இந்த சன் விருதுகள் எப்படி என்னையும் என் சேவையையும் அடையாளம் கண்டது என்பதுதான்... மிகவும் மகிழ்கிறேன் நன்றி கூறுகிறேன்.